தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்! நேரடியாகவே திமுகவை கிழித்தெடுத்த விசிக ஆதவ் அர்ஜுனா!
VCK Aadav Arjuna attack DMK MK Stalin Udhay
சென்னையில் நடக்கும் அம்பேத்கர் புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா பேசியதாவது, "இந்த மேடையில் திருமாவளவன் இல்லை, ஆனால் அவரது மனசாட்சி இங்கே உள்ளது. திருமாவளவன் பங்கேற்க முடியாத சூழலில், அவரது கனவு நிறைவேறுவதற்கு விஜய் புத்தகம் வெளியிட்டுள்ளார்.
ஆதிக்கத்திற்கு எதிராக பேசினால் எதிரிகள் உருவாவது இயல்பாகும். இந்தியா நேருவைப் பார்த்து பயந்த நேரத்தில், தமிழ்நாட்டில் அண்ணா வெற்றி பெற்றார். அண்ணாவின் தேர்தல் ஆராய்ச்சி மூலம் ஒரு மாநில அரசு வெற்றி பெற்றது.
இந்திய அரசியலில் காந்தி, அம்பேத்கர் ஆகியோர் முக்கியமான தலைவர்கள். தமிழகத்தில் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியவர் திருமாவளவன். இந்த மேடை, தமிழக அரசியலில் புதிய வரலாறு உருவாக்கும்.
கால சூழ்நிலைகள் பட்டியலின மக்களின் விலங்குகளை உடைக்கும். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு இடமில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தை கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் சாதி, மதம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். திராவிடம் என்பது அனைவரும் சமம் என்பதையே குறிக்கிறது. தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றே.
தமிழகத்தில் நடக்கும் மன்னராட்சியை எதிர்க்க வேண்டும். மக்கள் புதிய அரசியலுக்கு தயார். ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்காக போராட வேண்டும். புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்துள்ளார். விஜய் வேங்கை வயலுக்கு செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் மன்னராட்சி என்று ஆதவ் அர்ஜினா குறிப்பிடுவது அண்ணாவிற்கு பின் திமுகவின், கருணாநிதி, அவர் மகன் ஸ்டாலின் தற்போது அவரின் மகன் உதயநிதி என்ற நிலையைத்தான் சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு நேரடியாகவே திமுகவிற்கு சாவல் விடுக்கும் பேச்சு என்கின்றனர்.
English Summary
VCK Aadav Arjuna attack DMK MK Stalin Udhay