நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ? - ஆதவ் அர்ஜுனா பரபரப்பு டிவிட்!
VCK Aadhav Arjuna DMK MK Stalin Thirumavalavan Vanniyarasu
வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனரும், திமுகவை விமர்சித்தால் விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்திய நாட்டின் சுதந்திர வேட்கைக்குத் தனது கவிதை வரிகளால் உயிரூட்டியவர்.
அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளைத் தனது பாடல்களில் உருவாக்கியவர். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சாதிக்கு எதிரான குரலை உரத்து முழங்கியவர், பெண்ணடிமை ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றார்.
வறுமையான வாழ்வு தன்னை சூழ்ந்தபோதும் தான் கொண்ட கொள்கை இலட்சியத்தைக் கைவிடாதவர்.
நான் சோர்வடையும் பல நேரங்களில் எனக்கு உற்சாகம் கொடுக்கும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளைப் போற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும் மகாகவி பாரதியாரின் கைவைத்த வரி ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?..
English Summary
VCK Aadhav Arjuna DMK MK Stalin Thirumavalavan Vanniyarasu