சாதி கலவரத்தை தூண்டும் பேச்சு, கொலை மிரட்டல்! விசிக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்!
VCK Administrators suspended
2 விசிக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்!விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி செல்லப்பன், செல்வி முருகன் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து மூன்று மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், புவனகிரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மஞ்சகொல்லை பகுதியில் பாமக, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொடி கம்ப பீடங்களை உடைக்க முயன்ற பெண்ணின் கழுத்தை 24 மணி நேரத்திற்குள் அறுத்து விடுவதாக பேசிய விவகாரத்தில், செல்வி முருகன் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இதில், செல்லப்பன், வன்னியர் சங்கத் தலைவரின் கழுத்தை அறுப்பேன் என்று ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி இருந்த நிலையில், அவரையும் தற்போது கட்சியில் இருந்து மூன்று மாதம் தற்காலிகமாக நீக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
English Summary
VCK Administrators suspended