விசிக மது ஒழிப்பு மாநாடு - எடப்பாடி போட்ட அந்த கண்டிசன் இதோ! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கள்ளக்குறிச்சிமாவட்டம், உளுந்தூர் பேட்டையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் இந்த மாநாட்டில் மதவாத - சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறிய அவர், குறிப்பாக அதிமுக மற்றும் தவெக கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில், வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்குமா என்ற கேள்விக்கு அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 

இது தொடர்பாக பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து பங்கேற்பது குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck alcohol elimination conference here the conditioning that was put on by edappadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->