பள்ளி மாணவிகளுக்கு 'பாலியல்' தொல்லை கொடுத்த 'விசிக' நிர்வாகி! வெளியே வந்து இராணுவ வீரரை மிரட்டும் ஆடியோ வைரல்!
VCK Manimaran Audio Viral
தனித் தமிழ்நாடு கேட்டு, பிரிவினை வாதம் பேசிய விசிக திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த ராணுவ வீரரை, விசிக நிர்வாகியும், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு குற்றவாளியுமான மணிமாறன் மிரட்டல் விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருமாவளவனை கண்டித்து, மேகாலயாவில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளிட்டிருந்தார்.
தனித் தமிழ்நாடு கேட்கும் திருமாவளன், தமிழகத்தில் தனியாக நின்று ஒரு வார்டில் நின்று வெற்றிபெற முடியுமா? உன் சுயநலத்திற்கு இன்று தனிநாடு கேட்பாய், பின் மாவட்டத்தைப் பிரித்து கொடு என்பாய். உன்னை இவ்வளவு தூரம் பேச வைத்த ஆட்சியாளர்களின் தவறு இது" என்று அந்த வீடியோவில் ராணுவ வீரர் பேசியிருந்தார்.
இந்நிலையில், வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை லத்தூர் ஒன்றியச் செயலாளராக இருக்கும் மணிமாறன், 'நீ டெல்லியில தான இருக்க. உன் குடும்பம் இங்க எப்படி உயிரோட இருக்கிறது என்று பார்க்கிறேன்' என்று கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாச வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் செங்கல்பட்டு, புதுப்பட்டினம் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தபோது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையாகி வெளியே வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
VCK Manimaran Audio Viral