#தருமபுரி || விடுதலை சிறுத்தைகள் செய்த அராஜக செயல்., கொந்தளிப்பில் தம்பிகள்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நாம் தமிழர் கட்சியின் சுவரொட்டிகளை கிழித்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் அடுத்துள்ள ஏரியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கட்சி சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில் இலவச கல்வி, மருத்துவம் குறித்து சில வாக்குறுதிகளை தெரிவித்து நாம் தமிழர் ககட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நாம் தமிழர் கட்சியின் சுவரொட்டிகளை கிழித்து விட்டு அந்த இடத்தில் 'விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்' என்ற விடுதலை சிறுத்தை கட்சியின் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் தான், நாம் தமிழர் கட்சியின் சுவரொட்டியை கிழித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் கருத்தியல் ரீதியாக மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது சுவரொட்டியை கிழித்தும் அளவுக்கு சென்றிருப்பது, அரசியல் நாகரீகமற்ற செயல் என்றே நாம் தமிழர் கட்சியினரால் குற்றம்சாட்டப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck vs ntk in pennakaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->