கிழிந்தது முகமூடி! உண்மை காணொளியை வெளியிட்ட கதிர் ஆனந்த்!
Vellore DMK Candidate Kathir Anand MP Viral Video issue
நாடாளுமன்ற தேர்தலை முன்னியிட்டு அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ஒரு சில வேட்பாளர்களின் பிரச்சார வீடியோக்களை, சிலர் திட்டமிட்டு வெட்டி-ஒட்டி அவதூறு பரப்புவதும் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் கடந்த 14 மணி நேரமாக வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் பிரச்சார வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாக அந்த காணொளியில், "மேடையில் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பெண்களின் முகம் எல்லாம் பளபளவென்று தெரிகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் செலுத்தியது வந்துவிட்டதா? என்று கதிர் ஆனந்த் பேசியுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த பலரும் முதல்வர் செலுத்திய மகளிர் உரிமைத் தொகையில் தான் பெண்கள் பவுடர் போட்டுக்கொண்டு பளபளவென்று இருப்பது போல திமுக எம்பி கதிர் ஆனந்த் எப்படி பேசலாம் என்றும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
உண்மையில் அங்கு நடந்தது என்ன?
ஆனால், அந்த காணொளி முழுமையான காணொளி அல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. கதிர் ஆனந்த் பேசுவதை திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் வெட்டி-ஒட்டி வெளியிட்டுள்ளனர்.
இதனை அம்பலப்படுத்தி கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள காணொளியில் தெளிவாக காண முடிகிறது. அந்த உரையாடலின் விவரம் பின்வருமாறு:
கதிர் ஆனந்த் : "நலமாக இருக்கிறீர்களா?. அனைவரும் பவுடர் அடித்து, பேரன் லவ்லி போட்டு பளபளவென இருக்கிறீர்களே"
மக்கள் : "தளபதி கொடுத்த ரூ.1000 காரணமாக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்"
கதிர் ஆனந்த் : "ஓ.. ஆயிரமா?.. நன்றாக தெரிகிறது. பளிச்சென இருக்கிறார்கள். தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என்று கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
மக்களோடு மக்களாக கதிர் ஆனந்த் பேசியது இதுதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அங்கு இருந்த மக்கள் "மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள்" என்று கதிர் ஆனந்தை பாராட்டியும் அனுப்பியுள்ளனர்.
மேலும், கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள இந்த உண்மை காணொளியை திமுகவினர் பகிர்ந்து, பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தன்னை திட்டமிட்டு இழிபடுத்த நினைப்பவர்கர்களுக்கு தக்க சமயத்தில் சரியான பத்திலடியை கொடுத்துள்ளார் கதிர் ஆனந்த் என்கின்றனர் சமூகவலைத்தள வாசிகள்.
English Summary
Vellore DMK Candidate Kathir Anand MP Viral Video issue