வேங்கைவயல்: மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்ட சிபிசிஐடி போலீஸார்!
Vengaivayal Issue CBCID Police
வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸார் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளனர்.
இது தொடர்பான மனுவை புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அவர்கள் தாக்கல் செய்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும், இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தாலும், குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கு முன்பு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸார் பலமுறை மனு தாக்கல் செய்து, நீதிமன்றத்திடம் இருந்து அவகாசம் பெற்றிருக்கிறார்கள்.
இந்நிலையில், மீண்டும் ஒரு முறை, அதாவது மேலும் ஒரு மாத கால அவகாசம் கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
Vengaivayal Issue CBCID Police