ஊட்டியில் ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு...!
Vice Chancellors Conference chaired by Governor RN Ravi in Ooty
நீலகிரி ஊட்டியில், தமிழக ஆளுநர் 'ஆர்.என்.ரவி' தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை:
அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி 'ஜெகதீப் தன்கர்' பங்கேற்கிறார்.ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாநாட்டிற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'திருமாவளவன்' உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
Vice Chancellors Conference chaired by Governor RN Ravi in Ooty