பேட்ஜ் வொர்க்! திருட்டு திராவிட மாடல் ஆட்சி.. கொந்தளிக்கும் ஹெச்.ராஜா! - Seithipunal
Seithipunal


பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழகம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட ஒரிரு மாதங்களிலேயே அதன் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சேதமடைந்து வருகிற செய்திகளை புகைப்படங்களாகவும், காணொளி காட்சிகளாகவும் பத்திரிக்கை மற்றும் ஊடக செய்திகள் வாயிலாக நாம் தொடர்ச்சியாக பார்த்து அறிந்து வருகிறோம். 

தரமற்ற கட்டிட கட்டுமான நிறுவனங்களுக்கு அதிக கமிஷன் தருகிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக கட்டுமான ஒப்பந்தத்தை திமுக அரசு வழங்கி வருவதே இதற்குக் காரணம். 

பள்ளி மாணவர்களின் உயிரை விட பணமே பெரிது என்கிற திமுக தலைவர்களின் பேராசை மனப்பான்மையை இதற்கு பெரும் காரணம் என்பதே நிதர்சனமான உண்மை. 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியிலும் திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா கண்ட மூன்று மாதத்திற்குள் ஒட்டுமொத்த மேம்பாலமும் தூண்களோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்சியை அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் நாம் செய்தியாகக் கண்டோம். 

சென்னை மாநகராட்சியில் கழிப்பறைகளை தூய்மைபடுத்தும் ஒப்பந்தத்திற்கு ஒரு கழிப்பறைக்கு ஒரு கோடி ரூபாய் செலவு என்கிற ரீதியில் அறிவிப்பு வந்ததை பார்த்து ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்தோம். 

மாணவர்கள் பயிலும் பள்ளி வகுப்பறை தொடங்கி மாநகராட்சி நிர்வாகத்தில் இருக்கும் கழிப்பறை வரை ஊழல் செய்து மக்களின் வரிப்பணத்தை சூறையாடும் திருட்டு திராவிட மாடல் ஆட்சிக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க தமிழக மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டுமென இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP H Raja Condemn DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->