நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சி..வீடு கட்டும் பயனாளி வீட்டிற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர்!
The mind is a show of mind District Collector visits house builder
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோணசமுத்திரம் ஊராட்சி பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி சுபாஷினி நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்து பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 2030க்குள் “குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடைவது தான் தமிழ்நாடு முதலமைச்சர் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு வழங்க கோரி கலைஞர் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்புகள், பதிவு செய்தோர் பயனாளிகளாக கருதப்படுவர்.
கணக்கெடுப்பு திட்டங்களின் கீழ் ஊராட்சியின் இலக்கிற்கேற்ப தகுதியான பயனாளிகள் கிராம ஊராட்சி அளவிலான குழு இறுதி செய்யும். குழு உறுப்பினர்களாக ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்ளனர். குழு ஒப்புதல் அளித்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இறுதி செய்யப்பட்ட பயனாளி விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) அவர்களிடமிருந்து பெற்று மாவட்ட ஆட்சியர் மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்படும், பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகள் பணி உத்தரவு வழங்கப்பட்டு பணி தொடங்கப்படும். 2024-25-ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 4000 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது, எல்லாபுரம்-374, கும்மிடிப்பூண்டி -387, கடம்பத்தூர்-656, மீஞ்சூர்-389, பள்ளிப்பட்டு-175, பூவிருந்தவல்லி-293, பூண்டி-570, புழல்-21, ஆர்கே பேட்டை-221, சோழவரம்-243, திருத்தணி-270, திருவாலங்காடு-495, திருவள்ளூர் -292, வில்லிவாக்கம்-97 ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு 4954 தகுதியான பயனாளிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கு 360 சதுர அடியில் 300 சதுர அடி கான்கிரீட் தளத்துடன், 60 சதுர அடி பயனாளியின் விருப்பப்படி சாய்தள கூரை அமைத்து கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் ஆஸ்பெஸ்டாஸ் அல்லது வேறு வகை இயற்கை பொருட்களால் ஆன கூரைகளை பயன்படுத்த கூடாது. வீடொன்றுக்கு ரூ.3.10 இலட்சம் மானிய தொகையாக வழங்கப்படும். இதை தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மனித சக்தி நாட்கள் ஊதியமாக வீடு கட்டும் பணிக்கு 90 நாட்களுக்கு ரூ. 28,710, கழிவறைக்கு 10 நாட்களுக்கு ரூ. 3,190 ம் வழங்கப்படும். மேலும் கழிவறை கட்டுவதற்கு ரூ.12,000 மானியத்தொகை தனியாக வழங்கப்படும், ஆக மொத்தம் ரூ.3,53,900/- பயனாளிக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பயனாளி விருப்பத்திற்கேற்ப செங்கல், சாம்பல் செங்கற்கள், சிமெண்ட் கற்களை கொண்டு சிமெண்ட் கான்கிரீட் தூண்கள் கொண்ட அமைப்பில் அரசினால் வழங்கப்பட்ட 4 வடிவமைப்பில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வீடுகள் பயனாளி கேற்ப கட்டிக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடொன்றுக்கு 140 மூட்டைகள் தரமான சிமெண்ட்,320 கிலோ கிராம் இரும்பு கம்பிகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.இத்திட்டத்தில் பயன்பெற்ற சுபாஷினி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.இதில் உதவி செயற்பொறியாளர் கோமதி, பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அற்புதராஜ், அருள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
The mind is a show of mind District Collector visits house builder