நடிகர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! உதவி கோரும் குடும்பம்!
Actor Super Good Subramani in hospital
தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர் ஆகும் கனவில், சரவண சுப்பையா மற்றும் பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வாய்ப்புகள் இன்றி நடிகராக களம் இறங்கினார்.
பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் சிறப்பான காட்சிகளை வழங்கியுள்ளார். பரமன் படத்தில் தலைமை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலம் மோசமான நிலையில் இருக்கின்ற சுப்பிரமணி, கடும் பொருளாதார தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது குடும்பத்தினர், அவரது சிகிச்சைக்காக பொதுமக்கள் மற்றும் சினிமா துறையினரிடம் பண உதவிக்காக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
English Summary
Actor Super Good Subramani in hospital