குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால், அதற்கு முன்பாக புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்வு செய்ய வேண்டும். 

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம், துணை குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 5 தேதி (இன்று) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19 ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு நடத்தப்பட்டால் அதன் எண்ணிக்கையும் ஆகஸ்ட் மாதம்6-ஆம் தேதி மாலை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice Presidential election nominations


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->