மாநாட்டுக்கு பின் ஆட்டத்தை தொடங்கிய விஜய்!...தவெக முதல் ஆலோசனை கூட்டம் தொடங்கியது! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் 27-ம் தேதி  நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை பனையூரில் இன்று தவெக தற்காலிக நிர்வாகிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தற்போது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்திற்கு முன்னதாக மாநாட்டில் உயிரிழந்த 6 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில் தவெக மாவட்ட நிர்வாகிகள் இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் அரசியல் கட்சியனரின் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பொது மக்களை நேரடியாக சந்திப்பதற்காக  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. அதன்படி கோவையில் அடுத்த மாதம் 27-ம் தேதி முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது கட்சியின் கொள்கை குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூற உள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay started the game after the conference the first consultation meeting started


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->