திமுக அரசிற்கு துணைநிற்கும் அதிமுக.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 

இதனால், முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து சட்டப்பேரவையில் அறிவித்தார்.  இன்று, தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடக்கி நடைபெற்று வருகிறது. 

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநில உரிமையையும், சட்டமன்றத்தின் அதிகாரமும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து, நீட் விலக்கு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. 

இந்நிலையில், நீட்தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijaya baskar press meet about neet issue admk support for dmk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->