கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் புகைப்படம் வெளியீடு.! கண்கலங்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் பிறந்தநாள் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 நடிகராக அறிமுகமாகி தனது திறமையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் போது தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்தவர். 

பின்னர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கி அரசியலிலும், கால்பதித்தார். அவருக்கு அரசியலிலும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தனர். அனைத்து தரப்பு அரசியல்வாதிகள், ரசிகர்கள் என்று எந்த எதிரியையுமே சம்பாதிக்காத மனிதர் என்ற பெருமையை தற்போதும் கொண்டிருப்பவர் விஜயகாந்த். 

இன்று அவரது 70வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

தொடர்ந்து, வீடியோகால் மூலம் விஜயகாந்த் ரசிகர்களை சந்தித்துள்ளார். அவரது பிறந்தநாள் புகைப்படம் ஒன்று குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவரது மகன்கள், மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth Birthday Photo released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->