விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டு நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக-பாமக இடையே நேரடி போட்டி நிலவியது. பாமக சார்பில் சி.அன்புமணி, திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு உள்ளனர்.  விக்கிரவாண்டி இடைதேர்தலில் மொத்தம் 1,96,495 பேர் வாக்களித்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் சீல் அகற்றி வாக்கு சாவடி வாரியாக மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு சென்றனர்.

சரியாக இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் பிறகு 30 நிமிடங்கள் பிறகு மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by election Counting of votes has begun


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->