அதிமுகவுக்கு தாவிய த.மா.கா இளைஞரணி தலைவர்.!!
Villupuram TMC youth wing president joined in AIADMK
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் பாஜக உடனான தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சு வார்த்தையை இன்று நடத்தி முடித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ஜி கே வாசன் பாஜக தொகுதி பங்கிட்டு குழுவிடம் வலியுறுத்தியதாக தெரிய வருகிறது.
ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது பெரும்பாலான நிர்வாகிகளுக்கு விருப்பமில்லை என அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் JS.ஜெயராஜ் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் முன்னிலையில் தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகுவது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
English Summary
Villupuram TMC youth wing president joined in AIADMK