மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... கியாஸ் விலை எகிறிவிடும் - மாணிக்கம் தாகூர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், மக்களிடையே கை சினத்திற்கு ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர், பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கியாஸ் சிலிண்டர் விலை ரூ 450 ஆக இருந்தது. தற்போது அதன் விலை ஆயிரத்திற்கும் மேல் சென்று விட்டது. 

மீண்டும் தேர்தலுக்காக ரூ. 100 குறைத்தவர்கள் வெற்றி பெற்றால் ரூ. 2000 ஆக உயர்த்திடுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கியாஸ் விலையை ரூ. 500 ஆக குறைக்கப்படும். 

இது தவிர நீட் தேர்வு, கல்வி கடன், அரசு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் 100 நாளில் இருந்து 150 நாளாக ஒரு உயர்த்தப்படும். அதற்கான ஊதியமும் 400 ஆக உயர்த்தி வழங்கப்படும். 

ராகுல் காந்தி மீண்டும் பிரதமராகும் விதமாக வருகின்ற மக்களவைத் தேர்தலில் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar dmk Manickam Tagore campaign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->