இனி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம்!...பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பரபரப்பு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய மாயாவதி, அதன் மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சதி நடப்பதாகவும் கூறினார்.

முன்னதாக, முறைகேடு மற்றும் மோசடி மூலம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி போலி வாக்குகள் போடப்பட்டன, இப்போது அதேபோன்ற நடவடிக்கைகள் இவிஎம்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன என்றும்,  இது ஜனநாயகத்திற்கு கவலையும் வருத்தமும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் போலி வாக்குப்பதிவைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, நாங்கள் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We will not contest in the by elections anymore bahujan samaj party leader sensational announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->