தமிழ்நாட்டில் தாமரை மலராது ; " தலைவராக இருக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு " - கனிமொழி!! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இரண்டாவது முறையாக வாக்களித்து வெற்றி பெற செய்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி. இந்த தோல்விக்குப் பிறகு பாஜகவின் மாநில தலைவராக இருக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்   மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.

இந்த நிலையில் நேற்று இந்தியாவில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக மகளிர் அணி தலைவியும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று சுமார் 3,92,738 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியை எதிர்த்துப் போட்டுட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசுகையில், இரண்டாவது முறையாக என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற செய்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தாமரை ஒரு காலத்திலும் மலராது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் எனது எதிர்பார்ப்பும் அதுதான் அது இன்று மாலை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரியவரும். பதினெட்டாவது நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாட்டில் தோல்வியை சந்தித்த பிறகு தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருக்க என்ன தகுதி இருக்கு என்று கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What qualifies Annamalai to be the leader Kanimozhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->