கிளாம்பாக்கத்தில் எப்போது ரயில் நிலையம் வரும்? - அமைச்சர் சேகர்பாபு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பார்வையாளர்களை கவரும் விதமாக காலநிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அடுத்த  25 நாட்களுக்குள் காலநிலை பூங்காவை  முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று கூறிய அவர், தொடர்ந்து  முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  ஆம்னி பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 150 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு  ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்த அவர், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கொண்டு வர அழுத்தம் கொடுத்து  வருவதாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

When does the railway station arrive at kilambakkam minister shekharbabu interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->