அதிரடி சரவெடி!!!நான் பதில் சொல்லும் போதெல்லாம் ரூட் மாறிய எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இல்லாததன் காரணம் என்ன? - துணை முதல்வர்
whenever I answered Opposition Leader not in assembly Deputy Chief Minister
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பேசியதாவது,"முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எனது காரில் ஏறியபோது நான் ரூட் மாறமாட்டேன் என்றார்.

ஆனால் டெல்லியில் மாறிவிட்டார்.டெல்லியில் 3 கார்கள் மாறித்தான் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.பாசிஸ்டுகள் எத்தனை ரூட்டுகள் போட்டு அடக்க நினைத்தாலும் பட்ஜெட்டில் ஒரே ஒரு ரூ போட்டு அலற செய்தவர் முதலமைச்சர்.
எதிர்க்கட்சி தலைவரானாலும் அவருடன் கூட்டணி வைக்க துடிப்பவர்களும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்க.தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.
ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்திய ஜனநாயகத்தின் போர்க்குரல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை "எனத் தெரிவவித்தார்.இந்த சர்ச்சையான பேச்சு அரசியல்வாதிகளிடையே பேசுப் பொருளாக மாறியுள்ளது.
English Summary
whenever I answered Opposition Leader not in assembly Deputy Chief Minister