அரியணை யாருக்கு?....மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு  ஒரே கட்டமாக இந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த நிலையில்,  20-ம் பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு எண்ணத்  தொடங்கப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு எண்ணப்படுவதால் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதே போல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில்,
கடந்த 20-ம் தேதி  மீதமுள்ள 38  தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. . இந்த நிலையில்,  20-ம் பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு எண்ணத்  தொடங்கப்பட்டு உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who is the throne counting of votes started in maharashtra jharkhand


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->