வயநாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்?...தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
Will congress regain power in wayanad voting has begun count
வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி நடப்பு மாதம் 13-ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்ட நிலையில், இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜ.க சார்பில் நவ்யா ஹரிதாஸ் களம் கண்டனர்.
இந்த நிலையில், 13-ம் தேதி பதிவான வாக்குகள் அனைத்து வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் காரணமாக வாக்குச் சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 1,354 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், மூன்று பிரதானக் கட்சிகள் உள்பட 16 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Will congress regain power in wayanad voting has begun count