திமுக-விசிக கூட்டணி உடையும்?...விசிக துணைப் பொதுச் செயலாளர் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


இங்கு ஒருவர் மட்டுமே ஆளப் பிறக்கவில்லை என்றும், திருமாவளவனின் கனவுகள் விரைவில் நிறைவேறும் என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்டப் பொருளாளர் சகோதரர் திரு. அ. மணி அரசு அவர்கள் இல்ல திருமண விழாவில் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று மணமக்கள் ம. அழகுமீனாட்சி - ஜெ.ராஜகணபதி ஆகியோரை வாழ்த்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆணவப் படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வை, கல்வி நிலையங்களில் இருந்து உருவாக வேண்டும் என்றும், 10 லட்சத்துக்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்களுக்கான தரவுகளை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், சமூக ஊடகங்களில் பலர் தனது சாதியைக் குறிப்பிடுவதாக தெரிவித்த அவர், எனக்கே என்னுடைய சாதி என்னவென்று தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் இருக்கிறேன் என்று பேசினார்.

கொள்கை, அதிகாரக் கூட்டணி என்றெல்லாம் பேசுகிறார்கள். தலித் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்றும், இங்கு ஒருவர் மட்டுமே ஆளப் பிறக்கவில்லை என்று பேசிய ஆதவ் அர்ஜுனா, எங்களுக்கான அரசியலை எங்களால் உருவாக்க முடியும் என்றும், திருமாவளவனின் கனவுகள் விரைவில் நிறைவேறும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will the dmk vck alliance break vck deputy general secretary sensational speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->