பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும்! ரூட்டை மாற்றிய ராகுல்காந்தி! - Seithipunal
Seithipunal


இளைஞர் காங்கிரஸ் சார்பில் 'சக்தி அபியான்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், அரசியல் மற்றும் முடிவு எடுப்பதில் பெண்களுக்கும் சம பங்களிப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், அரசியல் அரங்கில் பெண்களின் குரலை வலுப்படுத்த 'இந்திரா தோழமை அமைப்பு' என்ற திட்டம் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகள் மூலம், அதிகளவில் பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளதாவது , “அரசியலில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் ஓராண்டுக்கு முன்பு இந்திரா தோழமை அமைப்பை தொடங்கினோம். இன்று, இந்த முயற்சி பெண்களின் தலைமைத்துவத்துக்கான சக்திவாய்ந்த இயக்கமாக வளர்ந்துள்ளது.

உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள். எனவே, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் பெண்கள் அனைவரும் சக்தி அபியான் திட்டத்தில் சேர்ந்து, பெண்களை மையமாக கொண்ட அரசியலில் தீவிர பங்கேற்பாளர்களாக மாறுங்கள்.”

இந்நிலையில், "எங்களுடன் இணைந்து இன்றே http://shaktiabhiyan.in-ல் பதிவு செய்யுங்கள். கிராமம் முதல் ஒட்டுமொத்த தேசம் வரை இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்" என ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women should come to politics more Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->