#தர்மபுரி || கூகுள் பே மூலம் கஞ்சா விற்ற இளம்பெண், வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே கஞ்சா கடத்திய வழக்கில் இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி அடுத்த மதிகோன்பாளையம் குண்டலப்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு புல்லட் வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அந்த இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் கையில் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரையும் அந்த இளம் பெண்ணையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தியதில், அந்த இளம்பெண் காரியமங்கலம் அடுத்த அத்திமரப்பட்டி சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி ஜோதி என்பது தெரியவந்தது.

மேலும் அந்த புல்லட் ஓட்டி வந்த வாலிபர் காரியமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பதும் தெரியவந்தது. இவர்கள் கூகுள் பே மூலம் கஞ்சா விற்பனை செய்ததும், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்கள் இடத்துக்கே சென்று கஞ்சா விற்று வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து புல்லட்டுடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஜோதி மற்றும் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man arrested cannabis through Google Bay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->