ஆந்திராவில் தொடரும் பழிவாங்கும் படலம் - ஜெகன் மோகன் வீட்டை தொடர்ந்து அலுவலகம் இடிப்பு..! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் ஒன்றாக நடந்தது. இந்த தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைத் தழுவியது. 

பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்த தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் அங்கு ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு 4வது முறையாக மீண்டும் முதலமைச்சராகி உள்ளார்.

முன்னதாக ஜெகன் மோகன் முதல்வராக இருந்தபோது சந்திரபாபு நாயுடுவை அதிகாலையில் கைது செய்து சிறையில் அடைத்தார். அதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் மீதுள்ள புகார்கள் மற்றும் ரகசிய தகவல்கள் அனைத்தையும் படு தீவிரமாக சேகரித்து வருவதாக தெரிகிறது. 

சில தினங்களுக்கு முன்பு தான் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் இருந்த சில கட்டிடங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி இடிக்கப் பட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளி மண்டலம், சீதாநகரம் படகு வளாகத்தில் கட்டப்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் மற்றும் மங்களகிரி தாடேபள்ளி முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து இந்த கட்டிடம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்ட இடத்தில் கட்டப் படுவதாக கூறி இடித்துள்ளது. இது தெலுங்கு தேசம் கட்சியின் பழிவாங்கும் அரசியல் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YSR Congress Office Building Being Demolish In Andhra By TDP Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->