இளம்பெண் மீது ஆசிட் வீசி கொடூர தாக்குதல்! காதலர் தினத்தில் நடந்த பயங்கரம்!
Andhra Pradesh Lovers Attack Acid
ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், குர்ரம்கொண்டா பகுதியில் காதலர் தினமான இன்று பேர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
22 வயதுடைய இளம்பெண் ஒருவர், அவரின் முன்னாள் காதலனால், ஆசிட் வீசி கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
அவருக்கு வேறு ஒருவர் உடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அறிந்த முன்னாள் காதலன் கணேஷ், இதனை திட்டமிட்டு செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளம்பெண் வீட்டிற்கு அருகே பதுங்கியிருந்த கணேஷ், இளம்பெண்ணை சந்தித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆசிட் வீசி, தொடர்ந்து கத்தியால் குத்தி கொடூரமாக தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளம்பெண்ணை அங்கிருந்த குடும்பத்தினர் மீட்டனர். உடனடியாக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலுக்குப் பிறகு கணேஷ் தலைமறைவான நிலையில், குர்ரம்கொண்டா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது காதலர் தினத்தன்று நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Andhra Pradesh Lovers Attack Acid