உன் அட்டகத்தி வேலை இங்க வேணா! நீங்கதான் சென்னைக்கு அட்ரஸ்னா..அப்போ நாங்க யாருடா! பா.ரஞ்சித்தை விளாசிய மோகன் ஜி! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து நடைபெற்ற பேரணியில் பேசிய பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு இயக்குனர் மோகன் ஜி சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் விமர்த்தித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் முடிவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது, சென்னையில் இப்படி ஒரு பேரணி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆம்ஸ்ட்ராங்  அண்ணனை சமூக வலைதளங்களில் ரவுடி என சித்தரித்தவர்கள் அனைவரையுமே முற்போகவாதிகளும் திமுகவினரும் தான் என்று திமுகவை கடுமையாக சாடினார். திமுகவில் இருக்கும் தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். திமுக அரசுக்கு பயப்பட நாங்கள் உங்கள் கட்சி அடிமைகள் தலித் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. 

சென்னை மாநகராட்சி  மேயர் பிரியா, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் ராஜினாமா செய்து வேண்டும். நம்மை முடக்க திருமாவளவனை வைத்து காய் நகர்த்துகிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார். திருமாவளவன் அண்ணா நீங்கள் எங்கள் குரல்.

தொடர்ந்து பேசிய இயக்குனர் பா ரஞ்சித், மெட்ராஸ் எங்களுடைய கோட்டை. சென்னையில் வாழும்  40% மேற்பட்டோர் தலித்துகள் தான். சேரிகளின் வாக்குகளை பெற்று தான் கோட்டையை  அடைந்துள்ளீர்கள். அநீதிக்கு எதிராக போராடினால் ரவுடிகள் என்றால் நாங்கள் ரவுடிகள் தான் என்று இயக்குனர் பா.ரஞ்சித்  உணர்ச்சிவசமாக பேசி இருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி , ருத்ர தாண்டவம், பாகாசுரன் ஆகிய படங்களின் இயக்குனரான மோகன்ஜி இது குறித்து சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில், " என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற " என்று இவ்வாறு கடுமையாக இயக்குனர் பா ரஞ்சித்து பதிலடி கொடுத்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Mohan G condemned pa Ranjith speech


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->