இந்திய அரசுக்கு துணை நிற்போம்!! ஜி.வி பிரகாஷ் குமார் ட்விட்!! - Seithipunal
Seithipunal


கத்தார் நாட்டில் தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் & கன்சல்டன்சி சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் ராணுவத்திற்கு சேவைகளை வழங்கி வந்துள்ளது. 

நீர்மூழ்கி கப்பல் திட்டம் தொடர்பாக இந்த நிறுவனம் சேவை வழங்கி வந்த நிலையில் இத்தாலி நாடுடன் கத்தார் நாடு இணைந்து நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசிய விவரங்களை இந்தியாவைச் சேர்ந்த 8 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இஸ்ரேல் அரசுடன் பகிர்ந்து கொண்டதாக கத்தார் அரசு கைது செய்ததாக தகவல் வெளியானது.

ஆனால் இவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் திடீரென 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாக கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான விவரங்கள் கிடைத்ததும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து கத்தார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இறங்கவுள்ளோம் என வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "நமக்காக இரவு பகல் பாராது உழைத்த நமது கடற்படை வீரர்கள் 8 பேரையும் நம் தாயகத்திற்கு பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நமது இந்திய அரசு எடுக்கும் அத்துனை முயற்சிகளுக்கும் துணை நிற்போம்… ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GVPrakash Tweet Lets support Indian govt with unity


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->