கையும் களவுமாக மாட்டிய இன்ஸ்டா காதலர்கள்; வீட்டார் செய்த தரமான சம்பவம்..!
Insta lovers caught red handed A quality incident done by the family
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும், உத்தரபிரதேச மாநிலம் ஜலாவின் பகுதியை சேர்ந்த சாமா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டா காதலியை பார்ப்பதற்காக காதலியின் சொந்த ஊரான ஜாலாவின் பகுதிக்கு பிரதீப் சென்றுள்ளார். அங்கு காதலியின் வீட்டுக்கு சென்ற பிரதீப், சாமாவிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது வெளியில் சென்றிருந்த சாமாவின் வீட்டார் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள், இவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதையடுத்து, பெண் வீட்டார் உடனடியாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் பழக்கமான காதலியை பார்ப்பதற்காக காதலியின் வீட்டுக்கு காதலன் சென்ற நிலையில், இருவருக்கும் பெண் வீட்டார் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அங்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Insta lovers caught red handed A quality incident done by the family