மூன்று மாதத்தில் 10 லட்சம் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான சமூக ஊடக கணக்குகளை தடை செய்வது, விஷம பதிவுகளுக்கு தடை போடுவது, மக்கள் மத்தியில் சச்சரவை ஏற்படுத்தும் போலி செய்திகளை தவிர்ப்பது உள்ளிட்டவற்றில் தொடர் நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தது.

அந்த வகையில் அக்டோபர் 26 - நவம்பர் 25 இடையிலான ஒரு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 3 லட்சம் கணக்குகளை முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் அரசுக்கு தெரிவித்துள்ளது. இவற்றில் சிறார் பாலியல், பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட கணக்குகள் ஆகும். 

அரசு பரிந்துரைத்தது மட்டுமன்றி, சுய தணிக்கையின் பெயரிலும் ஆட்சேபகரமான கணக்குகளை ட்விட்டர் முடக்கி உள்ளது. இதே போன்று அக்டோபர் - செப்டம்பர் மாதங்களுக்கு இடையே மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. 

அதன் படி, ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சுமார் பத்து லட்சம் கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது. அரசின் வழிகாட்டுதலின் பெயரிலான முடக்கத்துக்கு அப்பால், செயல்படாத மற்றும் கைவிடப்பட்ட பழைய கணக்குகளை நீக்கும் பணியையும் ட்விட்டர் நிர்வாகம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten lakhs twittar accounts close in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->