இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படம் - கையும் களவுமாக சிக்கிய வாலிபர்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபாரா மாவட்டம் பட்டமுண்டே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தினேஷ் சேத்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த தினேஷ், அதனை மார்ஃபிங் மூலம் நிர்வாணப்படங்களாக மாற்றியுள்ளார்.

அத்துடன் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு ஒன்றைத் தொடங்கி அதில் இளம்பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதையறிந்த அந்த இளம்பெண் புகைப்படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று தினேஷிடம் வலியுறுத்தியுள்ளார். 

இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தினேஷ் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண்ணின் சகோதரர், காவல் துறையில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தினேஷை இன்று கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for obscene photos published instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->