தஞ்சையில் கோலாகலமாக வீதி உலா வந்த பெருமாள் - மெய் சிலிர்க்க வைக்கும் வெண்ணெய்த்தாழி அலங்காரம்!
A Big Devote Festival in Tanjore
தஞ்சை மாவட்டத்தில் நடந்து முடிந்த கருட சேவை விழாவை தொடர்ந்து சுமார் 15 பெருமாள் கோயில்களில் உள்ள சுவாமிகளுக்கு நவநீத சேவை விழா எனக் கூறப்படும், வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில், ராஜவீதிகளில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கீழ் இயங்கி வரும் கோவில்கள், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை. இவற்றின் சார்பாக, 89-ம் ஆண்டு கருட சேவை திருவிழா, ஆழ்வார் மங்களாசாசன நிகழ்வுடன் சென்ற 8-ம் தேதி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, 24 கருட சேவை திருவிழா நடைபெற்றது. அப்போது 15 பெருமாள் கோயில்களில், வெண்ணெய்த்தாழி பெருவிழா என்ற நவநீத சேவை விழாவும் நடந்தது.
இந்த விழாவில், வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், மேல அலங்கம் ரங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து வந்த சுவாமிகளின் புறப்பாடு நேற்று நடைபெற்றது.
இதையடுத்து, அந்தந்த கோயில்களிலிருக்கும், கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னர், அரண்மனையைச் சுற்றியுள்ள ராஜவீதி தெருக்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஆயிரம் கணக்கான பக்தர்கள், பெருமாள் மற்றும் லஷ்க்கு, ஆண்டாள்க்கு, அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்த விழா இன்று (ஜூன் 11) விடையாற்றியுடன் முடிவு பெறுகிறது.
English Summary
A Big Devote Festival in Tanjore