ஆடிப் பெருக்கு அன்று தங்கத்துக்கு 'இணையான' இந்தப் பொருளை வாங்க மறக்காதீங்க..!!
Aadi Perukku Pooja Rules
அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமான ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் ஆடி 18 எனப்படும் ஆடிப் பெருக்கு அன்று செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக ஆடிப் பெருக்கு அன்று எது வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த ஆண்டு ஆடி 18 ஆகஸ்ட் 3ம் தேதி வருகிறது.
ஆடிப் பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்?
* அன்று காலை முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
* ஆடிப் பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றுவது மிகவும் புனிதமாக கருதப் படுகிறது. கயிற்றில் தாலி அணிந்திருப்பவர்கள் வேறு புதிய கயிறோ, அல்லது புதிய தாலி சரடோ மாற்றிக் கொள்ளலாம்.
* ஆடிப் பெருக்கு அன்று காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் தாலி கயிற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
* அன்று அரிசி, பருப்பு, புளி, மிளகாய், எண்ணெய் போன்ற பொருட்களை வாங்கி வீட்டில் நிறைத்து விட வேண்டும்.
* இன்று எது வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பதால் வசதி படைத்தவர்கள் தங்கமோ அல்லது வேறு ஏதேனும் விலை உயர்ந்த பொருட்களோ வாங்கலாம். ஆனால் முடியாதவர்கள் தங்கத்திற்கு இணையான குண்டு மஞ்சள் வாங்கலாம்.
* மேலும் அன்று பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பொட்டு ஆகிய மங்கலப் பொருட்களை தாம்பூல தட்டில் வைத்து மூன்று முதல் 5 பேருக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இதனால் குலம் விருத்தியடையும் என்பது ஐதீகம்.