நாளை ஆடி சனிக்கிழமை.. சிவன் கோவிலுக்கு சென்று இதை செய்தால் துன்பங்கள் தீரும்.!
Aadi sanikizhamai sivaperuman vazhipadu
அம்மனுக்கு ஏற்ற ஆடி மாதம் வட மாநிலங்களில் சாவன் என்று கூறப்படும். இது சிவனுக்கு ஏற்ற மாதமாக வட மாநிலத்தவர்களால் கருதப்படுகிறது. ஆடி வெள்ளியில் அம்மன் வழிபாடும், ஆடி சனியில் சனி பகவான் வழிபாடும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
ஆடி மாத சனிக்கிழமையில் சனி பகவானுக்கு செய்யப்படும் பூஜை மிகச்சிறந்த பலன்களை கொடுக்கக் கூடியது. சனி தோஷம் இருப்பவர்கள் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சிவபெருமானே வழிபடுவதன் மூலம் சனி தோஷத்தின் தாக்கத்தை குறைக்க முடியும்.
சனி பகவான் சிவபெருமானின் பக்தராவார். ஆகவே சனி தோஷம் இருப்பவர்கள் சிவபெருமானை வழிபடும்போது சனியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். அதிலும் ஆடி மாதங்களில் வரும் சனிக்கிழமை சிவனை போதித்தால் சனி தோஷம் அவர்களை பாதிக்காது.
இந்த நாளில் சனி பகவான் மற்றும் சிவபெருமான் இருவரையும் வழிபட்டால் இருவரும் மகிழ்ச்சி அடைந்து பல்வேறு நன்மைகளை நமக்கு கொடுப்பார்கள். பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுபவர்கள் இந்த ஆடி சனிக்கிழமையில் சனி பகவான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது அவர்களது பண பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்யும்.
ஆடி மாத சனிக்கிழமையில் சனி பகவான் கோவிலுக்கு சென்று அங்கே நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். மேலும் அந்த நாட்களில் சிவன் கோவிலுக்கு அல்லது சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி சாலிசாவை படிப்பதாள் சனி தோஷத்தில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.
அதுபோல ஆடி சனிக்கிழமை நாட்களில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மாறாக அன்றைய தினத்தில் இரும்பு பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்வதால் சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
English Summary
Aadi sanikizhamai sivaperuman vazhipadu