நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்.! இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.!
Aippasi Thirukalyanam begins today with flag hoisting at Nellaiappar temple
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி பெருந்திருவிழா, ஆடிப்பூர உற்சவம், ஆவணி மூலத்திருவிழா, பங்குனி உத்திரத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. மேலும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையிலும் சிறப்பு அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடக்கிறது.
வருகின்ற 21ஆம் தேதி காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார்.
22-ஆம் தேதி கம்பா நதியில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.
23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
English Summary
Aippasi Thirukalyanam begins today with flag hoisting at Nellaiappar temple