அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலையா.?! இந்த பொருட்களை பூஜித்தால் அதிர்ஷ்டம் வசப்படும்.!
atchaya thiruthiyai mahalakshmi poojai porutkal
அட்சய திருதியை நாளில் பணவரவை பெருக்கும் மகாலட்சுமி கோமதி சக்கரம்:
அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திருதியை வரும் மே 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகின்றது. இந்த தினத்திற்காக நிறைய மக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஏனென்றால், இந்த சுப தினத்தில் மகாலட்சுமி அம்சம் நிறைந்த கோமதி சக்கரம், வலம்புரி சங்கு, மகாலட்சுமி சோழி, லட்சுமி குபேர காயின், ஸ்ரீபால், விநாயகர் கண், காப்பர் முலாம் பூசிய பிளேட் மற்றும் தங்கம் இதில் ஏதேனும் ஒன்றை இல்லத்தில் வாங்கி வைத்து வழிபடும்போது செல்வ வளம் பெருகி தடையின்றி பணவரவை பெருக்கி கொள்ளலாம்.
தங்கம் வாங்க இயலாதவர்களாக இருப்பவர்கள் மகாலட்சுமி அம்சம் நிறைந்த பொருட்களை அட்சய திருதியை அன்று பூஜை செய்தால் இந்த அட்சய திருதியன்று மகாலட்சமி வாசம் செய்யும்.
பலன்கள் :
பணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மகாலட்சுமி கோமதி சக்கரம் சிறந்த தீர்வாகும்.
மகாலட்சுமி கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெற செய்கின்றன.
மகாலட்சுமி கோமதி சக்கரத்தை நம் வீட்டில் வைத்து வழிபட்டால் பல புண்ணிய தலத்திற்கு சென்று வழிபட்ட பலனை நம் வீட்டிலேயே பெறலாம்.
English Summary
atchaya thiruthiyai mahalakshmi poojai porutkal