பிரமாண்டமாக ஆரம்பமாகும் ஆவணித் திருவிழா - திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.! - Seithipunal
Seithipunal


பிரமாண்டமாக ஆரம்பமாகும் ஆவணித் திருவிழா - திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றும் உலகப் புகழ் பெற்ற கோவிலுமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும். அந்தத் திருவிழாக்களில் ஒன்று ஆவணித்திருவிழா.

இந்தத் திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 01- 30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. 

அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 5 மணி முதல் ஐந்து முப்பது மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழாவில் தினமும் சுவாமியும் அம்பாளும், ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி பத்தாம் தேதியும், பச்சை சாத்தி பதினொன்றாம் தேதியும் நடைபெறுகிறது. மேலும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13 -ம் தேதி நடைபெறுகிறது. 

இந்தத் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அதற்கேற்ப அனைத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர திருச்செந்தூர் ஆலய நிர்வாகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avani festival starts in thiruchenthur from tomarrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->