ஆவணி மாத பிரதோஷம் - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்! - Seithipunal
Seithipunal


ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் மலை கோவில் நடை திறக்கப்பட்டிருப்பதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். .

விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், இன்று காலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், பக்தர்கள் இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் சிறப்பு பூஜைக்கான முன்னேற்பாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avani Month Pradosha Devotees gathered in Chaturagiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->