தினம் ஒரு திருத்தலம்.. வலம்புரி ஆதிகால அரசமரத்தடி லட்சுமி விநாயகர் திருக்கோயில்.!! - Seithipunal
Seithipunal


தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

கோயம்புத்தூர் மாவட்டம் பொம்மனாம்பாளையம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கோயம்புத்தூரிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் வடவள்ளி அமைந்துள்ளது. வடவள்ளியிலிருந்து பொம்மனாம்பாளையத்திற்கு செல்ல மினி பேருந்து வசதிகள் உள்ளன. பொம்மனாம்பாளையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

 அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயிலில் கிழக்கு பார்த்த விநாயகர், வடக்கு பார்த்த அம்மன், தெற்கு பார்த்த கால பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

மூலவரான வலம்புரி விநாயகர் மற்றும் ஆதி கால அரசமரத்தடி விநாயகர் என இரண்டு விநாயகர் சிலைகள் இருப்பது இந்த கோயிலின் சிறப்பு.

கருவறை நுழைவு வாயிலின் ஒருபுறம் நர்மதேஸ்வரரும், மறுபுறம் ஞானாட்சி அம்மனும் வீற்றுள்ளனர்.

கோயிலின் வெளியே நவகிரக சன்னிதியும், கால பைரவர் சன்னிதியும் அமைந்திருப்பது சிறப்பு.

வேறென்ன சிறப்பு?

விநாயகப் பெருமான் சிலையின் பீடம் ஆகம விதிகளின்படி, குறைந்த அளவு உயரத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

இத்தலத்தில் விநாயகருடன் ராகுவும், கேதுவும் வீற்றுள்ளனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

விநாயகர் சதுர்த்தி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி போன்ற தினங்களில் சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

இத்தலத்தில் விநாயகர் லட்சுமி விநாயகராக அருள்பாலிப்பதால் சகல செல்வங்களையும் அள்ளி தருகிறார்.

திருமண பாக்கியம் மற்றும் நினைத்த காரியங்கள் நடைபெற இங்கு பிரார்த்திக்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயிலில் வேண்டியவை நிறைவேறியவுடன் அருகம்புல் மாலை சாற்றி மற்றும் அபிஷேக ஆராதனை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Lakshmi vinayagar kovil special


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->