ஆனித் திருமஞ்சனம் என்றால் என்ன ? அது சிவன் கோவிலில் ஏன் விஷேசமாக கருதப்படுகிறது தெரியுமா? - Seithipunal
Seithipunal



நடனக் கோலத்தில் சிவ பெருமான் நடராஜராக காட்சி தரும் கோவில் தான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மிகவும் விசேஷமானது. 

அந்த ஆனித் திருமஞ்சனம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். முதலில் திருமஞ்சனம் என்றால் மூலவரின் திருமேனிக்கு நறுமண எண்ணெய் பூசுவது. மெய்யஞ்சனம் என்பது வெறும் உடம்புக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய்யஞ்சனம் என்பது தான் இறைவனின் திருமேனிக்கு எண்ணெய் பூசுவதைக் குறிக்கும். இந்த திருமெய்யஞ்சனம் என்ற சொல் தான் மருவி திருமஞ்சனம் என்று கூறப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்பமாக இருக்கும் இறைவனின் திருமேனிக்கு ஆனியில் திருமஞ்சனம் செய்யப் படுகிறது. சிவாலயங்களில் இந்த திருமஞ்சனம் மிகவும் விசேஷமானது. ஆனி மாதம் நடக்கும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வதோ அல்லது தேவையான பொருட்களை ஆலயத்திற்கு வாங்குவதோ ஏராளமான புண்ணியங்களை சேர்க்கும். 

மேலும் இந்த திருமஞ்சனத்தின் போது இறைவனின் திருமேனிக்கு செய்யப்படும் அபிஷேகத்தை நேரில் கண்டால் நமது அனைத்து பாவங்களும் போக்கும் என்று நம்பப் படுகிறது. சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாளாக இந்த ஆனித் திருமஞ்சனம் உள்ளது. 

 

பலவித நறுமண மற்றும் உடலைக் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படும் இந்த திருமஞ்னத்தை கண்டால் கன்னிப் பெண்களுக்கு திருமணமும், சுமங்கலிப் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரமும், ஆண்களுக்கு உடல் பலமும், தம்பதிகளுக்கு சுகமான இல்லற வாழ்வும் கிடைக்கும் என்று நம்பப் படுகிறது. 

மொத்தம் பத்து நாள் விளைவாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொண்டாடப்படும் இந்த ஆனித் திருமஞ்சனத் திருவிழாவை பதஞ்சலி முனிவர் தான் முதன் முதலில் துவக்கி வைத்தார். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டமும், நாளை (ஜூலை 12) ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Details Of Aani Thirumanjanam in Chidambaram Natarajar Temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->