மகாளய அமாவாசை எதிரொலி!....காலை முதலே நீர் நிலைகளில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் காசிக்கு நிகரானதாக கருதப்படும் நிலையில், இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இங்கு ஆடி, தை மற்றும் புரட்டாசி அமா வாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.  பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில்,  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர் களுக்கு தர்ப்பணம் அளித்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

இதே போல் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் இன்று குவிந்த பல்லாயிரக்ணக்கான பக்தர்கள், ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, பிண்டம் விடுதல், தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொது மக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்து வழிபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Echoing the mahalaya amavasai thousands of devotees gathered in the water levels since morning to pay their respects to the ancestors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->