பழனியில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் பங்குனி உத்திர திருவிழா.! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் என்று அனைவராலும் போற்றப்படும் முருகப்பெருமான் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் தெய்வானை அம்மனை திருமணம் செய்தார். இந்த நாள் பங்குனி உத்திர திருவிழாவாக, அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி கோவிலிலும் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

இந்த விழாவின் 6-நாளான 23-ந் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதனால், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flag hoisting in palani temple for panguni uthiram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->