ஆவணித் திருவிழா - திருச்செந்தூர் கோவிலில் கொடியேற்றம்.!
flag hoisting in thiruchenthur temple for aavani festival
தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி நேற்று மாலையில் சேதுராமன் அய்யர் கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு, கோவில் தெய்வானை யானையின் மீது அமர்ந்து 8 வீதிகளிலும் உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்பரூப தரிசனம் மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் 5.40 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.
English Summary
flag hoisting in thiruchenthur temple for aavani festival