வீட்டில் அதிர்ஷ்டம் எப்போதும் நிறைந்திருக்க..இதை செய்தாலே போதும்.! - Seithipunal
Seithipunal


உலக வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது செல்வம். அதன் அதிபதியாகவும், அதை அள்ளி வழங்குபவளாகவும் திகழ்பவள் மகாலட்சுமி. அவளே வீரர்களிடம் வீரலட்சுமியாகவும், தேசத்தைச் செழிக்க செய்யும் ராஜ்ஜிய லட்சுமியாகவும், உணவுப் பொருட்களில் தான்ய லட்சுமியாகவும், யோகிகளிடம் யோக லட்சுமியாகவும், மன சலனங்களை நீக்கும் தைரிய லட்சுமியாகவும், பிள்ளைச் செல்வம் அருள்வதில் சந்தான லட்சுமியாகவும், வீடுகளில் கிரக லட்சுமியாகவும், விளக்குகளில் தீபலட்சுமியாகவும் திகழ்கிறாள்.

செல்வத்தை அள்ளித் தருபவளான ஸ்ரீமகாலட்சுமி தாயாரை அனுதினமும் வழிபடுவது அவசியம். வெள்ளிக்கிழமைகள், ஏகாதசி, கார்த்திகை மாத ஸ்ரீபஞ்சமி திதிகளில் வழிபடுவது சிறப்பாகும்.

லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டுமின்றி, வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும். லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில விரத வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வ வளங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம்.

அப்படி மகாலட்சுமி எந்தெந்த பொருட்களில் வாசம் செய்கிறாள் என்று பார்க்கலாம். இந்த பொருட்களைப் பயன்படுத்தி வந்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக தங்கி விடுவாள். 

அவை வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம். 

கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக் சுருவம், கமண்டல நீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆல விழுது. 

தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. 

திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு.

நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம்.

மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனி முடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.

இந்த இடங்களில் எல்லாம் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். இந்த இடங்கள் அல்லது பொருட்களை தினமும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள மகாலட்சுமி நிலைத்து நிற்பாள்.

வறுமை நீங்கி, செல்வ செழிப்புடன், சகல சௌபாக்கியங்களுடன் நம்மை வாழவைக்கும் ஸ்ரீமகாலட்சுமி தேவியை வணங்கி இந்த நாளை இனிதாக்குவோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Home is always full of luck It is enough to do this


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->