வரவிருக்கிறது சித்ரா பௌர்ணமி.. விரதம் இருப்பது எப்படி?  - Seithipunal
Seithipunal


சித்ரா பௌர்ணமி.. விரதம் இருப்பது எப்படி?

பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி. இது சித்ரகுப்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து பண்டிகையாகும். இது முதன்மையான 'சித்திரை" மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படுகிறது.

பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி வரும் சனிக்கிழமை (16-04-2022) சித்திரை 3ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?

 சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.

மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயற்றம் பருப்பு, எருமைப்பால் சேர்த்து பாயாசம் செய்து நைவேத்தியம் படைக்கலாம்.

படையலுடன் எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்த கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த பானகங்களை தயாரித்து சித்ரா பௌர்ணமியன்று நண்பகல் ஏழைகளுக்கு வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

விரத பலன்கள் :

சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மனஅமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு :

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி மிகவும் விஷேசமான நாளாகும். அந்த நாளில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். 

இந்த ஆண்டு (2022) சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சித்ரா பௌர்ணமியன்று விரதமிருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும்...!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to fasting chithra full moon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->