திருச்செந்தூரில் யாகசாலையுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா..!  - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். பின்னர் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் கடலில் புனித நீராடி மாலை அணிந்து தங்களின் விரதத்தை தொடங்கினர். 

காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

இந்த கந்தசஷ்டி விழாவின் 6-ம் திருநாளான வருகிற 7-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

7-ம் திருநாளளன 8-ந் தேதி  இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவிற்காக நேற்று முதலே பக்தர்கள் கோவிலுக்கு வருகைத் தந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kandha sasti thiruvizha start in thiruchenthur temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->